Subscribe Us

header ads

உஷார்... வாடிக்கையாளர்களுக்கு மண்ணை அனுப்பிய e-shopping நிறுவனம் (வீடியோ)

இணையத்தில் பவர் பேங்க் புக் செய்தவருக்கு, மண்ணை அனுப்பி அதிர்ச்சியை தந்துள்ளது ஒரு e-shopping நிறுவனம். 


நம்மில் பெரும்பாலானோர் இப்போதெல்லாம் கடைகளுக்கு சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல், டீவி என என்ன வாங்குவதாக இருந்தாலும், அவர்கள் கிளிக்குவது e-shopping இணையதளங்களை தான். சிலர் வீடு கட்ட செங்கல் வாங்க கூட இந்த இணையதளங்களுக்கு தான் செல்கிறார்கள். ஏற்கெனவே மொபைல் புக் செய்தவருக்கு செங்கலை அனுப்பி e- shopping தளங்கள் அள்ளை கிளப்பியது நாம் அனைவரும் அறிந்ததே. 

ஆனால், இப்போது ஒரு போலி இணையதளம் நூதனமாக பவர் பேங்க் புக் செய்தவருக்கு மண்ணை அனுப்பி மோசடி செய்துள்ளது. இணையவாசி முகநூலில் ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்ற விளம்பரத்தை பார்த்து, அந்த இணைப்பை கிளிக்கி உள்ளார். அவருக்கு நல்ல பிள்ளையாக பவர் பேங்கையும் அனுப்பி உள்ளது அந்த நிறுவனம். ஆனால் பல மணிநேரங்கள் சார்ஜ் போட்டும் சார்ஜ் ஏறாததால், சந்தேகப்பட்டு பவர் பேங்கை உடைத்து பார்த்த போது, பேட்டரியில் மண் மட்டுமே இருந்துள்ளது.

இணையத்தில் பொருள் வாங்குவது தவறில்லை, ஆனால் நீங்கள் பொருள் வாங்கவது கண்ணியமான நிறுவனத்தில் தானா...? என்பதை ஒன்றுக்கு பலமுறை பரிசோதித்து செய்து கொள்ளுங்கள். வீடியோவை காண...

Post a Comment

0 Comments