Subscribe Us

header ads

வாட்ஸ் ஆப் பில் புது மோசடி உஷார்..

வாட்ஸ் ஆப் பில் வரும் தகவல்களை நம்மை அறியாமல் ‘பார்வேர்டு’ செய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதை பயன் படுத்தி புது மோசடி புற்றீசல் போல பரவி வருகிறது.
வழக்கமாக, உறவினர், நண்பர்கள் மூலம் வரும் தகவல்களை உடனே ‘பார்வேர்டு’ செய்வது நம்மில் பலருக்கும் உள்ள பழக்கம் தான். வாட்ஸ் ஆப் பில் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி மற்றவர்களுக்கு பரிமாறுவதும், அதில் கிடைக்கும் சலுகைகளை பார்ப்பதும், பயன்படுத்த முயற்சிப்பதும் சிலரின் வாடிக்கை.
இப்படி செய்வதில் தான் மோசடி அரங்கேறி வருகிறது. இமெயில் மூலம், மொபைல் எஸ் எம் எஸ் மூலம் நடக்கும் ஆன் லைன் மோசடிகளை தொடர்ந்து இப்போது இந்த புது வித மோசடி தலை தூக்கி உள்ளது.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
வாட்ஸ் ஆப்பை வழக்கம் போல நீங்கள் பார்ப்பீர்கள். அதில் பலர் மூலம் வந்த தகவல்களையும், வீடியோ, படங்களையும் அனுப்புவதில் அதிக ஆர்வம் எல்லாருக்கும் உண்டு. அதிலும், நல்ல விஷயங்கள், மருத்துவ, ஷாப்பிங் டிப்ஸ்கள் என்றால் பெண்களுக்குள் கண்டிப்பாக பரிமாறப்படுவதுண்டு.
உங்கள் நண்பர் ஒரு தகவலை உங்களுக்கு அனுப்பியிருப்பார். அதில், ‘நீங்கள் இன்னும் பத்து பேருக்கு பார்வேர்டு செய்தால், பிரபல பிராண்டு குளிர் பானம் வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்; குறிப்பிட்ட சினிமா படத்துக்கு 30 சதவீதம் கழிவு கிடைக்கும் என்றெல்லாம் கூட அதில் தகவல் வரும்.
இதை பார்த்தபின் அதில் ஈர்க்காமல் இருப்பவர் யாராவது இருப்பார்களா? உடனே, அதை பத்து பேருக்கு பார்வேர்டு செய்யத்தானே கை போகும்.
அப்படி மட்டும் செய்து விட்டால், நீங்கள் அடுத்த சில மணி நேரத்தில் மொபைல் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழக்கப் போவது நிச்சயம்.
நீங்கள் பார்வேர்டு செய்தால், அது உங்கள் நண்பர்களுக்கு போவதுடன், சலுகைகளை பெற ஒரு அடையாளம் தெரியாத வெப் சைட்க்கு ‘லிங்க்’ கிடைக்கும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் மொபைலில் உள்ள அத்தனை ‘ஆப்ஸ் ’ களையும் ‘லபக் ’கி, அவற்றில் உள்ள தகவல்களை, பாஸ்வேர்டு, கணக்கு தகவல்களை கறந்து விடும் அந்த வெப் சைட்.
அப்புறம் என்ன, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது சுலபம்தானே. நெட் பேங்கிங் வசதி மூலமோ, ஏடி எம் மூலமோ பணத்தை கறந்து விடலாம்.
உங்கள் மொபைலில் சேமித்து வைத்துள்ள பாஸ் வேர்டுகளும் கிடைத்தால் அதனால் இன்னும் பல விபரீதங்கள் ஏற்படுவது உறுதி.
வாட்ஸ் ஆப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டி விட்டது. அதிலும், தமிழ் உட்பட பல மொழிகளில் பதிவு செய்ய முடிவதால் பல அப்பாவி இளைஞர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்குவது எளிதாக நடக்கிறது என்று இன்டர் நெட் பாதுகாப்பு தொடர்பாக சாப்ட் வேர் உருவாக்கும் காஸ் பெர்ஸ்கி என்ற பன்னாட்டு நிறுவன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments