மும்பையில் கடந்த 6 மாதமாக பொதுமக்களை தொந்தரவு செய்துவந்த குரங்கு ஒன்றினை கைது செய்துள்ளனர்.
மும்பையின் மத்திய பகுதியில் கடந்த 6 மாதமாக சில குரங்குகள் உணவை திருடி வந்துள்ளன.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த குரங்குகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை கையாண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அந்த குரங்குகளில் ஒன்று மட்டும் தனியாக வந்துள்ளது.
அப்போது அப்பகுதி மக்கள் தொழில்முறை குரங்கு பிடிக்கும் நபரை வரவழைத்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு அந்த குரங்கை அந்த நபர் பிடித்துள்ளார். இதையடுத்து அந்த குரங்கின் கை, கால்களை கயிறால் கட்டி வைத்துள்ளனர்.
அந்த குரங்கு பிடிபட்டதுடன் அப்பகுதி மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளனர்.
இதையடுத்து அந்த குரங்கின் கை மற்றும் கால்களை கழற்றிவிட்டு கூண்டு ஒன்றுக்குள் அதனை அடைத்துள்ளனர்.
அந்த குரங்கு வடக்கு மும்பையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments