பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்து செல்வதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை அடுத்து இந்த சதவீதம் துரிதமாக அதிகரிப்பதாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு பெண்களில் தற்கொலை வீதம் 4 தொடக்கம் 5 ஆகவுள்ளது.
உலக அளவில் பெண்களின் தற்கொலை வீதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெறுகின்றது.
குறிப்பாக கொழும்பு, களுத்துறை, நீர்கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நிலைமை அதிகமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.


0 Comments