துருக்கியின் எல்லைப் பிராந்தியத்தில் தடுக்கப்பட்டுள்ள சிரியன் அகதிகளுக்காக விசேட முகாம்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான அகதிகள் துருக்கிய எல்லையில் தடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
அவர்களுக்கு தேவையான கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் துருக்கி தொண்டர் அமைப்புக்களின் அதிகாரிகளினால் விநியோகிக்கப்படுகின்றன.
கடந்த வாரம் அலிப்போ பிரதேசத்தில் சிரிய அரசாங்க துருப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 35 ஆயிரம் பேர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர்.
அகதிகள் துருக்கியின் ஊடாக அனுமதிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், துருக்கி தமது எல்லையை மூடிய நிலையிலேயே வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments