Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேசம் என்பது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வளம் கொழிக்கும் பிரதேசம் என்பது நாம் அறிந்த விடயமே !


ஆனால் , இன்று இப்பகுதி மூலம் அதிகம் பொருளாதார நன்மை அடைபவர்கள் நமது புத்தளம் மாவட்ட மக்களை விடவும் வெளிப்பகுதி மக்கள் தான் .

''உல்லாச புரி, சின்ன மாலைத்தீவு'' என்றெல்லாம் அழைக்கப்படும் இப்பகுதியில் பொருளாதார ரீதியாக மக்கள் இன்னும் பின்னிலையில் தான் உள்ளனர் .

ஆனால், ஏனைய அபிவிருத்தி ரீதியாகவேனும் முன்னிலையில் இருக்கிறார்களா ? என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறி தான் ?

இது தொடர்பில் நாம் இதற்கு முன்பும் சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம் .உதாரணமாக - காணிகளை வீண் விரயம் செய்தமை , மீன் பிடிக்கு என்று சரியான சந்தை வாய்ப்பு இன்மை போன்ற விடயங்கள் நாம் சுட்டிக்காட்டிய விடயங்களாகும் .

இதற்கு காரணம் மக்களின் அசமந்தமும் , குறுகிய மனப்பான்மையும் தான் முதலாவதாகும் . அரசியல் வாதிகளிடம் சென்று தனது வீட்டு பாதை பற்றியும், விளையாட்டு பொருட்கள் தாருங்கள் என்றும், பணம் வேண்டும் என்றும் கேட்பவர்களாக தான் இன்னும் மக்களில் அதிகமானோர் இருக்கின்றனர் 

இதை புரிந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் தேர்தல் காலங்களில் மட்டும் இந்த மக்களை உசுப்பேற்றி , கொடுக்க வேண்டியதை கொடுத்து நன்கு பயன்படுத்தி கொள்கின்றனர் , பின்பு மறந்து விடுகின்றனர் .

இந்நிலை மாற்றம் பெற நீண்ட நாட்கள் செல்லும் - அதுவரை இப்படியான சமூக தளங்கள் ஊடாக தான் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம் 
(இப்போதைய நிலையில் நமது சக்தி இதுவே )

கல்பிட்டிக்கும் - பாலாவிக்கும் இடையில் 40 கிலோமீட்டர் இடைவெளி உள்ளது , இந்த இடைவெளிக்குள் எத்தனை சிறுவர் பூங்கா உள்ளது ? இதை செய்ய வேண்டியது யார் ? இதை செய்யுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியது யார் ??

சிறுவர் பூங்காக்கள் என்பது சிறுவர்களின் உளவியல், ஆளுமை , திறமைகளை வளர்க்கின்ற ஒரு இடம் ஆகும் 

ஆகவே , நமது அரசியல்வாதிகள் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களாக !

-Mohamed Infas-

Post a Comment

0 Comments