16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞனொருவன் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கட்டட நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை அங்கு கட்டட தொழிலாளியாக வேலை செய்த 22 வயது இளைஞன் ஒருவனே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.
அவர் வீட்டிலிருந்த16 வயது சிறுமியை கடத்திச் சென்றே குற்றத்தை புரிந்துள்ளார். கடத்திச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் அன்றைய தினமே அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் தாய், தந்தையின் பொறுப்பில் இருந்த சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி திருக்கோவில், செங்கலடி போன்ற பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


0 Comments