Subscribe Us

header ads

யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்!(படங்கள் இணைப்பு)

கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விசாரணைகளில் கடந்த வாரம் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பொறுப்பான பதவியொன்றில் இருந்த யசாரா அபேநாயக்கவும் விரைவில் கைது செய்யப்படலாம் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இதற்கு தனது பேஸ்புக்கின் ஊடாக பதிலளித்துள்ள யசாரா அபேநாயக்க, யசாரா வெளிநாட்டு சென்றுள்ளாராம், எனக்கென்றால் வெளிநாடு செல்ல முடியாது போயுள்ளது.

இன்று நான் புறக்கோட்டை சென்றிருந்தேன்” என குறிப்பிட்டு தனது பேஸ்புக் கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர் யோஷிதவின் முன்னாள் காதலி எனவும் கூறப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments