Subscribe Us

சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவர் யாழில் சிக்கினர்

யாழ்ப்­பாணம் கொட்­டடி பகு­தியில் பத்து வயது சிறு­மி­யொ­ரு­வரை பாலியல் துஷ்பி­ர­யோகம் செய்ய முயன்ற இரு­வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கொட்­டடி குளி­யா­வடி பகு­தியில் நேற்று முன்­தினம் மாலை சிறுமியொருவர் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­காக தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்­டி­ருந்துள்ளார்.
இதன் போது இருவர் சிறு­மியை ஆசை வார்த்­தைகள் கூறி அழைத்து தமது அறைக்கு கூட்டிச் சென்று சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்­றுள்­ளனர்.
இத­னை­ய­டுத்து சிறுமி அச்­ச­ம­டைந்து அழு­த­வாறு வெளியே ஒடி வர முற்­பட்ட போது சிறு­மிக்கு 70ரூபா பணத்தை கொடுத்து அனுப்­பி­யுள்­ளனர்.
இதன் பின்னர் அவ்­வி­டத்­திற்கு சிறு­மியின் பெற்றோர் சென்று பார்த்த போது இரு­வரும் வீட்­டினுள் மறைந்­தி­ருந்­துள்­ளனர்.
பின்னர் பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த நபர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவர் உணவு விடு­தி­யொன்றை நடாத்­தி­வரும் ஜேர்மன் பிர­ஜா­வு­ரி­மை­உடையவர் என்றும் மற்­றை­யவர் ஈச்­ச­மோட்டைப் பகு­தியைச் சேர்ந்தவர் என்றும்தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தின் போது இவர்கள் இரு­வரும் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments