தனக்கு தொந்தரவு செய்த இளைஞனை நிற்க வைத்து பெண்ணொருவர் செருப்பால் அடிக்கும் காணொளி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில், அலகாபாத்தில் இந்த சம்பம் நடைபெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இந்த இளைஞர் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய எண்ணில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு எண்களிலிருந்தும் அப்பெண்ணை அவர் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அப்பெண் சம்பவத்தன்று அந்த இளைஞனை ஒரு இடத்திற்கு வர வைத்து, அங்கு பலர் முன்னிலையில் செருப்பால் அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஒருவர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
0 Comments