Subscribe Us

குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருப்பதே ஊடகங்கள் செய்யும் மாபெரும் தவறு! மஹிந்த

நல்லாட்சி அரசு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்கள் கண்டிக்கப்படவேண்டியவை எனவும், அந்த ஊடகங்கள் தொடர்ந்தும் மௌனம் சாதித்துவருவது மிகவும் வேதனைக்குரியது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேல்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி சங்கத்தின் பிரதம செயலாளருமான ஏ.டீ.ஜகத்குமாரவின் பத்தரமுல்ல, தெனியவந்த வீதியிலுள்ள இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் இனந்தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அந்த சேதத்தைப் பார்வையிடச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்களின் மத்தியில் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று நாட்டு மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மிரட்டப்படுகின்றார்கள். அல்லது ஊஇஐஈக்கு அழைக்கப்படுகின்றார்கள். ஊடகங்களுக்கும் இன்று அதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளைச் சகித்துக்கொண்டு ஊடகங்கள் மௌனம் சாதிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments