காதலர்கள் இருவரை கத்தியால் குத்திய இளைஞர் ஒருவரை பதுளை தாவரவியல் பூங்காவில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குத்தப்பட்ட பெண் இதற்கு முதல் சந்தேகநபருடன் காதல்வயப்பட்டிருந்தாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
22 வயதுடைய குறித்த பெண் அவரது காதலருடன் நேற்று மாலை பதுளை தாவரவியல் பூங்காவில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த சந்தேக நபர் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
அங்கு சேவையில் இருந்த ஒருவர் குறித்த சந்தேக நபரை பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளார்.
குத்தப்பட்ட பெண் பஸ்ஸர - மாவுஸ்ஸாகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
பெற்றோர்கள் சம்மதிக்காததால் குறித்த பெண் சந்தேகநபருடனான காதல் தொடர்பை நிறுத்தியுள்ளார்.
காயமடைந்த காதலர்கள் இருவரும் பதுளை பொது மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
0 Comments