தற்போது இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள யோசிதவின் கைது நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய சிவில் அமைப்புகளின் அழுத்தம் காரணமாகவே இடம்பெற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யோசிதவை கைது செய்ய சில தினங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இதன்போது ஊழலுக்கு எதிராக செயற்படபோவதாக மார்தட்டிக்கொண்ட நல்லட்சி அரசு கடந்த அரசின் ஊழல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் என கேள்வி எழுப்பி விசனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மடவளை நியுசுக்கு நெருக்கமான உயர்மட்ட பிரமுகர் ஒருவர் குறிப்பிடுகையில் நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய சிவில் அமைப்புகள் அரசுக்கு கொடுத்த கடும் அழுத்தமே யோசிதவின் கைதுக்கு முக்கிய காரணியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் உலவும் செய்திகள் மூலம் அறியக்கிடைத்தாக குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசு கடந்த அரசின் ஊழல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய அனைவரினதும் எதிர்ப்பார்பாக இருந்தது.
ஆட்சிமாற்றாம் இடம்பெற்று ஒருவருடம் கடந்த பின்னரும் கடந்த அரசின் ஊழல்கள் தொடர்பாக எதுவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை.
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் முன்னரும் ஊடக மாநாடுகளை நடாத்தி மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசின் உறுப்பினர்கள் பட்டியலிட்டதுடன் நின்றுவிட்டதாகவும் ஊழல்வாதிகளைஅரசு பாதுகாத்து வருவதாகவும் மஹிந்த விமல் ரனில் ஆகியோருக்கு இடையே டீல் ஒன்று இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.
0 Comments