Subscribe Us

header ads

ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன? விளக்கம் தருகிறார் அறிவு டோஸ் (நிரோஷன் தில்லைநாதன்)

தற்போது சமூக வலைத் தளங்களிலும், இணையத்தளங்களிலும் ஈர்ப்பு விசை அலைகள், அதாவது Gravitational Waves, பற்றிப் பேசப்படுகின்றது. "இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு" அல்லது "Scientific Sensation" என்று எல்லாம் தலைப்புகளை அவதானித்திருப்பீர்கள், சரி தானே? ஆனால் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன? அப்படி இந்தக் கண்டுபிடிப்பு ஏன் இவ்வாறு விசேஷமாகப் பேசப்படுகின்றது? 


இதில் உள்ள ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்த ஈர்ப்பு விசை அலைகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனினால் அவருடைய பொதுச் சார்புக் கோட்பாடு (Theory of Relativity) மூலம் 100 வருடங்களுக்கு முன்னரே கணிக்கப்பட்டது. 11.02.2016 வரை இந்த ஈர்ப்பு அலைகளை நேரடியாக அவதானிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அது அவதானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் எல்லோருக்குமே தெரியும், விண்வெளியில் நமது சூரியனைப் போல் என்ன, நமது சூரியனை விட எத்தனையோ மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களின் வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக, அதாவது black holes ஆக மாறிவிடும். அப்படி இரு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்பு இரண்டும் ஒன்றாகச் சேரும் பொழுது spacetime என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெளிநேரத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் அதிர்வுகளைத் தான் ஐன்ஸ்டைன் ஈர்ப்பு விசை அலைகள் என்று கூறினார். ஐன்ஸ்டைனின் அந்தக் கணிப்பு சரியானது என்பதை தற்போது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 

1609ம் ஆண்டில் கலிலியோ கலிலீ கண்டுபிடித்த தொலைநோக்கி அதாவது Telescope தான், தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியையே தலை கீழாகப் புரட்டிப் போட்டது. அதே போல் தான் இந்த ஈர்ப்பு விசை அலைகளின் கண்டுபிடிப்பும் நமது எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியை முற்றிலும் மாற்றி, புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தர அடிப்படையாக இருக்கப் போகின்றது என்று உறுதியாக நம்புகின்றார்கள். இன்று வரை ஒரு வித பதில்களுமே கிடைக்காத கேள்விகளுக்கு, உதாரணத்திற்குக் கருந்துளைகளின் கருவில் என்ன நடைபெறுகின்றது, அல்லது நமது பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு, எதிர்காலத்தில் பதில்களைக் காண இந்தப் புது ஈர்ப்பு அலை ஆராய்ச்சித் துறை உதவப் போகின்றது. 

ஆக மொத்தத்தில் இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதுக் கதவு திறந்து விட்டது என்பது மட்டும் அல்லாமல், இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கிடைக்கப்போகின்றது என்பதில் ஒரு வித சந்தேகமும் இல்லை! 

எனது SciNirosh Showஇல் இதைப் பற்றி ஒரு வீடியோ செய்ய இருந்தேன், ஆனால் தற்போது என்னால் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறேன். இருந்தாலும் இந்த மாபெரும் கண்டுபிடிப்பைப் பற்றி என்னால் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. பிடித்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

சரி, இனி நீங்கள் கூறுங்கள்! ஈர்ப்பு விசை அலைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் 
smile emoticon

இதைப் போல் வேறு அறிவியல் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் எனது YouTube Channelஐ Subscribe செய்யுங்கள்: https://www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

அன்புடன் உங்கள் 



Post a Comment

0 Comments