Subscribe Us

ஞானசார தேரர் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை! ‪


தேரர்களுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பிலான அறிவை வழங்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் பிணையில் விடுதலையான அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டார்.

2 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல ஹோமாகம நீதவான் நேற்று அனுமதி அளித்தார்.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னிலிகொட மனைவி சந்தியா எக்னிலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments