பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2014 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொம்பனித்தெரு நிபோன் ஹோட்டலில் ஜாதிகபல சேனா அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, பலவந்தமாக பிரவேசித்து அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரரை அச்சுறுத்தியமை, புனித குர்ஆனை இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதன்படி, நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடத்தே ஞானசார இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
சட்டத்தரணிகளை அச்சுறுத்தியதாகவும் ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments