Subscribe Us

கல்வி - என்பது தொழிலா ? தொழிலுக்கான உந்து சக்தியா ?


நமது சூழலில் ஒருவர் ''சாதாரண தரம் , உயர்தரம் , பல்கலைகழக தகைமை'' பெற்றுவிட்டார் எனில் அந்த நபரிடம் குடும்பத்தில் உள்ளவர்கள், நட்பு வட்டங்கள் , இன்னும் ஆசான்கள் என்று பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உள்ளது .

நாமும் சிலரிடம் கேட்டு இருக்கிறோம் , நம்மிடமும் பலர் கேட்டு இருப்பார்கள் .

அது யாதெனில் அடுத்து எங்கு வேலைக்கு சேர போகிறாய் ? என்பதாகும் .

அதாவது சின்ன வயதில் இருந்தே எங்காவது வேலைக்கு சேர வேண்டும் என்கிற ''மனப்பான்மை'' தான் வளர்க்கபடுகிறதே தவிர ஏதாவது ஒரு தொழிலை சுயமாய் தொடங்க வேண்டும் என்கிற மனப்பான்மை உருவாகுவதோ ?உருவாக்கபடுவதோ இல்லை . 

இன்னும் சுருக்கமாய் சொல்வது எனில் ''ரிஸ்க்'' இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு தான் மேலோங்கி இருக்கிறது 

நமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் தான் .

ஆனால் ,சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் வாழுகின்ற நம்மை போன்ற இளைஞர்கள் பாடசாலை கல்வியையும் தொழிலையும் பின்னி பினைக்காது அவர்களுக்கு பிடித்த ஒரு துறையில் காலடி எடுத்து வைத்து விடுகிறார்கள் .

அவர்களின் தொழிலை விரிவாக்குவதற்கு ஒரு உந்து சக்தியாய் தான் கல்வியை பிரயோகிக்கிறார்கள் .

நாம் அதற்கு மாற்றமாக கல்வி தான் தொழில் என்கிறோம் , அவர்கள் தொழிலுக்கு தேவையான ஒரு அம்சமே கல்வி எனும் அமைப்பில் தொழில் படுகிறார்கள் .

இரண்டிற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தான் நமது பொருளாதாரத்திலும் , அவர்களின் பொருளாதாரத்திலும் இடைவெளி காணப்படுகிறது .

-Mohamed Infas-

Post a Comment

0 Comments