Subscribe Us

பிரகீப் எக்னெலிகொடவின் மகனுக்கு நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க புலமைப்பரிசில்!

காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மூத்த மகனுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க புலமைப்பரிசில் ஒன்றை வழங்கியுள்ளார்.

இலங்கையின் முதலாவது சிங்கள இணையத்தள செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்குகள் ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பிரகீத் எக்னெலிகொடவின் மூத்த மகனுடைய கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புலமைப்பரிசில் ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.

நிதியமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், லங்காபுத்ர வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments