புத்தளம் கச்சேரியில் இடம்பெறும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாட கொழும்பில் இருந்து அவசரமாக புத்தளம் நோக்கி வந்து கொண்டிருக்கும் தருவாயிலே உங்களுக்கு இப்பதிவை இடுகிறேன்.
1978 ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எழுதிய இரண்டாவது அரசியல் யாப்பு தான் புத்தளம் முஸ்லிம் மக்களை அரசியல் அநாதையாக்கியது .
அதிலிருந்து தான் நாம் நமக்கான பாராளுமன்ற பிரதிநிதியை தொலைத்தோம், ஒன்றாக இருந்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்து விட்டு அவர்களுக்கு நமது வாக்குகளை தாரைவார்க்கும் சமூகமாய் மாறினோம், நமக்கும் ஒரு எம்.பி தாருங்கள் என்று பல கட்சிகளிடம் அரசியல் பிச்சை கேட்கும் நிலைக்கு வந்தோம்.
இப்படியெல்லாம் பாதிப்பை சந்தித்த , சந்தித்து கொண்டிருக்கும் நமக்கு மீண்டும் ஒரு அரசியல் யாப்பு மாற்றம் எனும் விடயம் மிகப்பெரிய அச்சத்தை உண்டு பண்ணி உள்ளது .
இந்த திருத்தத்தில் மீண்டும் புத்தளம் தொகுதியானது எதை எவற்றை எல்லாம் பறி கொடுக்க போகிறதோ எனும் கேள்வியை மனதில் உண்டு பண்ணி உள்ளது .
ஆகவே , இந்த யாப்பு சீர்திருத்த குழுவில் வந்து கருத்து சொல்லி நமது மண்ணை பாதுகாக்கும் விடயத்தில் கவனமாய் இருக்க வேண்டியது நமது கடமையாகும் .
ஆக, நமது மண்ணில் இருக்கும் அனைத்து கட்சி அரசியல்வாதிகள் , புத்திஜீவிகள் , உலமாக்கள் போன்றோரை அன்போடு வேண்டுகிறேன் .
புத்தளம் கச்சேரியில் வந்து யாப்பு சீர்திருத்த குழுவை சந்தித்து நமது தொகுதிக்கு ஏற்ற ஒரு யாப்பை உருவாக்க துணை புரியுங்கள் .
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக !
எஸ்.ஏ .எஹியா
உயர் பீட உறுப்பினர் -ACMC


0 Comments