முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச மற்றும் மகன் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு சொந்தமான சட்டத்தரணி சேவை நிறுவனமொன்றில் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய நிறுவனத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாமல் ராஜபக்ச மற்றும் சிராந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விரைவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறதுது.
நாமல் ராபஜக்சவின் நிறுவனத்தில் இடம்பெற்ற 500 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும், சிராந்தி ராஜபக்சின் சிரிலியே சவிய நிறுவனத்தில்
இடம்பெற்ற பல மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசரணைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லசந்த விக்ரமதுங்க மற்றும் வசிம் தாஜூடின் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments