Subscribe Us

header ads

ஊன்றுகோலுடன் தள்ளாடி நடக்கும் முதியவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மீட்பு



மொனராகலை, ஹுலந்தாவ சந்தியிலுள்ள பிபிலை பஸ் தரிப்பு நிலையத்தில் ஊன்றுகோலுடன் நின்றிருந்த 76 வயதான முதியவர் ஒருவரிடமிருந்து ஒன்றரை கிலோ காய்ந்த கஞ்சா மொனராகலை பொலிஸாரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லவாய, பலஹருவ பிரதேசத்திலிருந்து வந்த இவர் ஹுடலந்தாவ சந்தியில் இறங்கி மிகியங்கனை பஸ்ஸிற்காக காத்திருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கெதிவிக்கப்படுகின்றது.

ஊன்றுகோலுடன் தள்ளாடி நடக்கும் இந்த முதியவர் மூலமாக வேறொருவர் இந்த கஞ்சாவை மகியங்கனை அல்லது பிபிலைக்கு கடத்த முயன்றதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது 

தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments