பெயரளவில் நியமனங்களை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றவர்கள் இவ்வுலகில் தப்பித்துக்கொண்டு வாழலாம். ஆனால் மரணித்த பின்னர் நாளை மறுமையில் ஒவ்வொருவரும் பதில் கூறியே ஆகவேண்டும். அங்கு யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
அம்பாறை, பாலமுனை பொது ஜனாஸா அடக்கஸ்தளத் திற்கான பாராமரிப்பாளர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு ( 06) சனிக்கிழமை மரண உபகார நிதிய மனிதவள மேம்பாட்டு இணைப்பாளர் டாக்டர் எஸ்.எம்.றிபாஸ்டீன் தலை மையில் பாலமுனை அல் ஹிதாயா பெண்கள் வித்தியாலய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற் றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தங்களின் செயற்பாடுகளை மிக கன்னியமாக செய்யவேண்டும். இந்த பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை யாரும் யாரையும் குறைகாணாக்கூடாது. இதற்கு யாரும் ஊதியம் வழங்குவதுமில்லை , வழங்கப்போவதும் இல்லை. இதற்கான ஊதியத்தை எம்மைப் படைத்த அல்லாஹ் ஒருவனே வழங்குகின்றான். அந்த ஊதியம் நாளை மறுமையில் மதிப்பிட முடியாதளவு எமக்குக் கிடைக்கும். இந்த நம்பிக்கையில்தான் நாம் எல்லோரும் இணைந்து இவ்வாரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
இவ்வுலகில் யாரும் யாருக்கும் பதில் சொல்லி தப்பித்துக்கொண்டு வாழலாம். ஆனால் அல்லாஹ்விடம் யாரும் பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அதற்கெற்றாப்போல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிப்போம் என்றார்.
இந்நிகழ்வில் பாலமுனை முப்பெரு ஜும்ஆ பள்ளிவா யல்களின் தலைவர்களான அல்ஹாஜ் யூ.எல்.அபூபக்கர், அல்ஹாஜ் ஏ.உத ுமாலெப்பை, அல்ஹாஜ் எஸ்.லாஹிர், மரண உபகார நிதிய சேவைத்திட்ட பண ிப்பாளர் அல்ஹாஜ் ஐ.பி.எம்.ஜிப் ரி, மனிதவள மேம்பாட்டு இணைப்பா ளர் டாக்டர் எஸ்.எம்.றிபாஸ்டீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
0 Comments