( ஜி,முஹம்மட் றின்ஸாத் )
''ஈமான் கொண்டவர்களே! இரட்டிப்பாக, பன்மடங்காக வட்டி உண்ணாதீர் கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.
''வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் நினைவிழந்தவன் எழும்பு வது போலன்றி (மறுமையில்) வேறு விதமாக எழமாட்டார்கள். அந்த நிலைக்கு அவர்கள் ஆளானது, நிச்சயமாக ,வியாபாரம் வட்டியைப் போன்றதுதான் என அவர்கள் கூறியதால்தான். மேலும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான். ஆகவே, எவருக்கு தனது இறைவனிடமிருந்து (வட்டியைக் கண்டித்து) உபதேசம் வந்து அவர் அதனை விட்டும் விலகிக் கொண்டாரோ (அவர் அதற்கு) முன் (வாங்கிச்) சென்று போனது அவருக்குரியதே. அவரின் விடயம் அல்லாஹ்வின்பாற்பட்டதாகும். (இக்கட்டளை கிடைத்த பின்) எவர்கள் (வட்டியின்பால்) திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்;கியிருப்பார்கள்.''
முஸ்லீம் சமுகம் வட்டியில் இருந்து முழுமையாக விலகுவதக்கு கல்முனை ஹூதா பள்ளிவாசளினால் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு "அல் ஹூதா வட்டி இல்லா கடன் மையம்" என பெயர் இடப்பட்டுள்ளது.
இதன் முழு நோக்கம் சமுகத்தினை வட்டியில் இருந்து பாதுகாப்பதே !!
நீங்களும் வட்டி இன்றி கடன் பெற வேண்டுமாக இருந்தால் நிருவாகத்தினரால் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன அதர்க்கு அமைய நீங்களும் வட்டி இல்லா கடனை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு :
முஸ்லீம் அல்லாதவர்களும் கடன்பெறலாம்..
விபரங்களுக்கு :
ஹூதா பள்ளிவாசல்
பீச் ரோட்
கல்முனை


0 Comments