Subscribe Us

பிரித்தானியாவில் மில்டன்கீன்ஸ் நகரில் SLMCF இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினால் முஸ்லிம் கலாச்சார மண்டபம் திறப்பு! (படங்கள் இணைப்பு)


பிரித்தானியாவில் மில்டன்கீன்ஸ் நகரில் SLMCF இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினால் சுமார் 11 மில்லியன் பவுண்ட் செலவில் முஸ்லிம் கலாச்சார மண்டபம் திறப்பு!


இலங்கையை சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் எமது முஸ்லிம் சமுகத்தின் நீண்ட கால விடா முயற்சியினாலும் இறைவனின் அருளினாலும் சுமார் 22 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் கலாச்சார மண்டப முதற் பணி நிறைவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை அமைப்பின் தலைவர் தாஜுதீன் லெப்ப அவர்களின் தலைமையில் பொது  மக்கள் பார்வைக்கு கோலாகாலமாக திறந்து வைக்கப்பட்டது. 

இவ்விழாவில் பிரதம அதிதியாக மில்டன்கீன்ஸ் மாநகர முதல்வர் உட்பட நகர சபை உறுப்பினர்களும்  , பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் எமது சமுகத்தின் முயற்சியையும் வழர்ச்சியையும்  பாராட்டிய வண்ணம் இத்திட்டத்துக்கு அனைத்து வகையிலும் பங்கழிப்பு செய்தவர்களுக்கு நகரசபை சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். 

அனைத்துப் புகழும் இறைவனுக்கே 

இஸ்மாயில் நஈமுட்டீன்.








Post a Comment

0 Comments