மொனராகலை, ஹம்பேகமுவ, கொமகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
நபர் ஒருவர் குரங்கு ஒன்றை கொல்ல துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது குறி தவறியதனால், இந்த மரணம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம் பெற்ற குறித்த சம்பவத்தின் உயிரிழந்த நபர் 52 வயதுடையவராவார் .
சம்பவத்தில் உயிரிழந்தவர் தமது காணியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து , பிரதேசவாசிகளால் குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் விவசாய இடத்திற்கு அருகாமையில் விவசாயம் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் குரங்குக்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் உயிரிழந்த நபர் மீது தாக்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.


0 Comments