மன்னார் மதவாச்சி பிரதான வீதி பன்ன வெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து மன்னாருக்கு சென்ற சிறிய ரக கூலர் வாகனமே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து மன்னாருக்கு கூலர் ரக வாகனத்தில் மீன் கொள்வனவு செய்யவதற்காக நேற்று சென்று கொண்டிருந்த போது காலை 7 மணியளவில் பன்ன வெட்டுவான் பகுதியில் வைத்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரையின் காரணமாக, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பல தடவைகள் பிரண்ட நிலையில் வீதிக்கு அருகில் உள்ள குளக்கட்டுடன் மோதியுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.
0 Comments