அடிப்படைவாதிகள், முஸ்லிம்கள் தொடர்பில் எம்மிடமுள்ள சாட்சிகள், தகவல்களை எந்தவித மறைத்தலும் இன்றி வெளிப்படுத்தினால் இன்றும் இந்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என பொதுபல சேனாவின் செலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தள்ளார்.
சிறையிலுள்ள ஞானசார தேரர் ஊடகங்களுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இதனை இன்றைய சிங்கள அச்சு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அக்கடிதத்தின் தமிழ் மொழியாக்கத்தினை டெய்லி சிலோன் வாசகர்களின் நலன்கருதி இங்கே தருகின்றோம்.
கடந்த 20 வருடங்களாக நாட்டுக்கும், பௌத்த மதத்துக்கும், இனத்துக்கும் எதிராக கிளர்ந்துவந்த சக்திகளை பொறுப்பாளர்களின் கண்களைத் திறப்பதற்காக முயற்சிகளை முன்னெடுத்தோம்.
சிலபோது சூட்சமமான முறையிலும், சிலபோது மென்மையான முறையிலும் நாட்டுக்கு ஏற்படவுள்ள அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்த முயற்சித்தோம்.
பௌத்தர்களினதும், ஹிந்துக்களினதும் சமய சிந்தனைகளுக்கு எதிராக கலகம் ஏற்படுத்தும் விதமாக பண்பாடில்லாத, சட்ட விரோதமாக இயங்கும் 400 இற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சக்திகள் இந்நாட்டில் இயங்குகின்றன. இவற்றின் செயற்பாடுகள் பற்றி சகல ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தியும் எந்தவொரு சங்க சபையும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக ஒரு நடவடிக்கையையும் எடுக்க வில்லை. இவர்களிடம் கேள்வி எழுப்பவாவது ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தரவில்லை.
பௌத்த கொள்கையை எரித்து, பௌத்தர்களே அதனை தரையில் போட்டு மிதித்ததை தனது கண்களால் கண்டுள்ளேன். இதற்கு எதிராக செயற்படுவது ஒழுக்காற்றுப் பிரச்சினை என்றால், நான் எந்தவொரு தண்டனையையும் சந்திக்கத் தயார். இந்த சக்திகள் அனைத்தும் தற்பொழுது எனக்கு எதிராக ஆயுதமேந்தியுள்ளன. சட்டத்தினால் தன்னைக் குற்றவாளியாக்கி சிறையில் தள்ள தேவையான சகல நடவடிக்கைகளையும் அந்த சக்திகள் தயாரித்துள்ளன.
அடிப்படைவாதம், முஸ்லிம் ஆக்கிரமிப்பு தொடர்பில் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பத்தையேனும் உங்களது ஊடக அமைப்பும், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எமக்குத் தரவில்லை. சகல அரசியல்வாதிகளும் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள குரல் எழுப்பி வந்த வேளையில், நான் சிங்களவர்களை விழிப்படையச் செய்து, சிங்களவர்களுக்கு உள்ள ஒரே நாட்டை பாதுகாக்க போராடினேன்.
இதனால், என்ன நடைபெற்றது? அரசியல் வாதிகளும், தன்னை ஊடகவியலாளர் எனக் கூறிக் கொள்ளும் என்.ஜி.ஓ. களின் முகவர்களும் என்னை ஒரு கலகக்காரர் எனவும், இனவாதி எனவும், மத தீவிரவாதி எனவும் சீல் குத்தியது மாத்திரமே. சில சந்தர்ப்பங்களில் பிக்குகள் கூட வெட்கமில்லா முறையில் என்னை விமர்சனம் செய்தனர்.
நாட்டுக்கு, இனத்துக்கு எதிராக முஸ்லிம் ஆக்கிரமிப்பு சக்திகள் தொடர்பில் என்னிடம் பாரியளவு சாட்சிகள் உள்ளன. இன்றுவரை எந்தவொரு பொறுப்புதாரியும் அவற்றை ஏறெடுத்தும் பார்த்திருக்கிறார்களா?
சிறுபான்மை, சிறு சமய குழுக்கள் என்பவற்றின் பிரச்சினைகளை தங்களது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு மேலாக தூக்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், சிங்கள அமைப்புக்கள் வெளிப்படுத்தும் ஒரு பிரச்சினைக்காவது தீர்வு தேடியிருக்கிறார்களா? உதாரணத்துக்கு, ஹலால் பிரச்சினை, ஜெய்லானி பிரச்சினை, மத மாற்று பிரச்சினை, கிழக்கு மாகாண புன்னிய பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
புத்த பெருமான் மனித இறைச்சி சாப்பிட்டாரா? கல்லை வணங்குபவர்கள் மடையர்கள் போன்ற தகவல்கள் அடங்கிய சீ.டீ. தட்டுக்கள் கூட பௌத்தர்களை கோபமூட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
கையில் ஒரு சதம் கூட இல்லாமல், ஆத்ம சக்தியை வைத்து செயற்பட்ட எனக்கு இந்த சக்திகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அநியாயத்தைப் பார்க்கும் போது, புத்த சாசனத்துக்கு இதனை விட ஒரு அழிவொன்று நிகழ்ந்திருக்குமா?
சிலவேளை, அடுத்து வரும் நாட்களில் பிணை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் 14 நாட்கள் அல்லாமல் 14 வருடங்கள் சிறைச்சாலை சாப்பாடு சாப்பிட நேர்ந்தாலும், சொல்லவுள்ளவற்றை எழுதி அனுப்வேன்.
எம்மிடமுள்ள சாட்சிகள், தகவல்களை எந்தவித மறைத்தலும் இன்றி வெளிப்படுத்தினால் இன்றும் இந்நாட்டில் இரத்த ஆறு ஓடும்.
நான் அகிம்ஷை வழியில் போராட்டத்தை ஆரம்பித்தேன். பிற்காலத்தில் தடைப்படாத ஒரு புரட்சியாக கட்டியெழுப்பப்பட்டது. எமது கடந்த கால முன்னெடுப்புக்கள், எம்மிடமுள்ள தகவல்கள் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர்களிடம் அவகாசம் கிடைக்குமாக இருந்தால் வரவேற்கத்தக்கது எனவும் தேரர் அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
தமிழில் – முஹிடீன் இஸ்லாஹி
0 Comments