Subscribe Us

header ads

பொலித்தீன் பாவனை கட்டுப்பாடு - இன்று முதல் இறுக்கமாக அமுல்


20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன் வகைகளின் பாவனையை இல்லாமல் செய்யும் சட்டம் இன்று முதல் (1) முதல் இறுக்கமாக அமுலாக்கப்படவுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 20 மைக்ரோனுக்கு குறைவாக பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோருக்கு ரூபாய் 10 ஆயிரம் அல்லது இரண்டு வருடம் குறையாத சிறைதண்டனைக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும் என அந்த அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவித்தார். 

இந்த சட்டம் ஏற்கனவே அமுலில் இருக்கின்ற போதும், முறையாக பின்பற்றப்படுவதில்லை.

இந்த நிலையில் அதனை உரிய வகையில் இறுக்கமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments