15 வயது மகன் வீசிய கோடரி, தந்தையின் உயிரை பறித்த சம்பவமொன்று அக்குரஸ்ஸை, மில்லகஹதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான சமரசிங்க தனபால (48) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் இவர் மதுபானத்துக்கு அடிமையானவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தினம் மேற்படி நபர், மது அருந்திய நிலையில் தனது வீட்டுக்கு சென்றுள்ளதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார்.
தந்தையின் நடத்தையில் பொறுமையிழந்த மேற்படி சிறுவன், அருகில் கிடந்த கோடரியை எடுத்து தந்தையை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
படுகாமயடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 15 மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments