Subscribe Us

header ads

இலங்கை தனி பௌத்த நாடல்ல: சந்திரிக்கா

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா கலந்து கொண்டார். பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, 

இலங்கையில் மூவின மக்களும் பல்கி பெருகி உள்ளனர். தனி பௌத்த நாடல்ல.  அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

பாடசாலைகளில் மூவின மக்களும் கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். ஆனந்தா மற்றும் நாலந்த கல்லூரிகளில் பௌத்த மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ் மற்றும் கிறிஸ்தவ பிள்ளைகளும் படிக்கும் நிலைமை உருவாக வேண்டும்.

நாம் அறிவிலிகளாக செயற்படுவதை நிறுத்தி, எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக நாம் பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments