Subscribe Us

header ads

பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்: உலகின் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கும் புதிய வசதி அறிமுகம்


சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் பேஸ்புக் நிறுவனம் உலகின் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கும் ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 65 கோடி விளையாட்டுப் பிரியர்கள் இந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ மூலம் உலகின் எந்த மூலையிலும் நடக்கும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளையும், அவைசார்ந்த வாசகர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் கருத்துகளையும் ‘லைவ்’ ஆக கண்டுகளிக்க முடியும்.

விளையாட்டுகளைப் பற்றி ‘லைவ்’ ஆக விமர்சிக்கும் வசதியை தற்போது வழங்கிவரும் டுவிட்டரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகமாகும் பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்துப் போட்டிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தொடங்கும் சூப்பர் பவுல் போட்டியும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

நாளடைவில், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளும் பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இடம்பெறவுள்ளன. தனிப்பட்ட ஒரு போட்டியைப் பற்றி குறிப்பிட்டு தேடினால் (search) அந்த காட்சியை உடனடியாக காணும் வசதியும் இதில் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments