மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் இறுதி சடங்கு இன்று கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், அவரின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு, பலர் உரிமை கோர ஆரம்பித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன இது தொடர்பில் கூறும் போது, தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்த பதவி வெற்றிடம் தமது கட்சியான ஜனநாயக தேசிய இயக்கத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றுள்ளார்.
மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்தார்.
இதற்கிடையில், கடந்த 20ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில், இந்த பதவி வெற்றிடம் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்திருந்தார்.


0 Comments