Subscribe Us

header ads

பிளாஸ்டிக் எப்படி உருவானது என்று தெரியுமா ?

பாலிதின் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் கொம்புகள் குறிப்பாக மாடுகளின் கொம்புகளை குறித்த ஆய்வே பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மாடுகளின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அதன் பிறகு ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பாலுடன் கந்தகம் கலந்து வல்கனைசிங் என்ற ரப்பரை 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் என்பவர் கண்டறிந்தார்.
இதுவே செயற்கை பிளாஸ்டிக் உருவாக காரணமாக அமைந்தது. இவரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
தாவரங்களிலிருந்து பெறப்படும் மரத் தாதுக்களுடன் நைட்ரிக் அமிலத்தை சேர்த்து இதனை அவர் கண்டறிந்தார். அதன் அடுத்தகட்ட முயற்சியாக ஜான் வெஸ்லி என்பவர் 1868 ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் நைட்ரிக் அமிலம் மற்றும் கற்பூரம் சேர்த்து செல்லூலாய்ர்ட் என்ற பிளாஸ்டிக்கை உருவாக்கினார்.
இதுவே தற்போது வரை பில்லியர்ட்ஸ் விளையாட தேவையான பந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து 1926 ல் பாலிவினைல் குளோரைடு வகை பிளாஸ்டிக், பாலியூரித்தீன் வகை பிளாஸ்டிக் ஆகியவை தயாரிக்கப்பட்டன.
இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலி எத்திலின் டெரப்தலைட் என்ற மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் வேதியியல் வல்லுநர்களான ஜான் ரெக்ஸ், ஜேம்ஸ் டெனண்ட் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே தற்போது குளிர்பான பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments