Subscribe Us

header ads

பிரதமர் நாட்டில் இல்லாத நேரத்தில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை மூடும் சூழ்ச்சியில் ஜனாதிபதி

பிரதமர் நாட்டில் இல்லாத நேரத்தில், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை மூடும் சூழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்சவை வழக்கில் இருந்து காப்பற்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து வேறு கட்சியை தொடங்கி, கட்சியை பலவீனப்படுத்துவதை தடுத்து கட்சிக்குள் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவே ஜனாதிபதி, நிதி மோசடி விசாரணைப் பிரிவை மூட முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜபக்ச அணியுடன் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் பசில் ராஜபக்சவே தடையாக இருந்து வருகிறார். வழக்கில் இருந்து அவரை காப்பற்றுவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது அதிகாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கருதுவதாக கூறப்படுகிறது.

நாட்டுக்கு உலக முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்காக சுவிஸர்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டிருந்த நேரத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருக்கு அறிவிக்காது, நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியான என கேட்டு சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டமா அதிபர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான சுஹத கம்லத் பதில் சட்டமா அதிபராக பணியாற்றி வரும் நிலையில், ஜனாதிபதி அவரிடம் சட்ட விளக்க கேட்டுள்ளமையே சூழ்ச்சியானது நிலைமை எனவும் கூறப்படுகிறது.

சுஹத கம்லத், பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ராஜபக்ச ஆதரவாளர் என கூறப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்ச்சிக்கு அமைய சுஹத கம்லத் நிதி மோசடி பிரிவு சட்டத்திற்கு ஏதுவானதாக இல்லை என தீர்மானித்த பின்னர், அந்த விசாரணைப் பிரிவு மூடப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

இதனையடுத்து மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வெள்ளவத்தையில் இயங்கி வரும் பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவை நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்ற வர்ணம் பூச தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை தற்காத்து கொள்வதற்காக நல்லாட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவை பழிகொடுக்க ஜனாதிபதி முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments