இந்திய – மும்பை நகரில் உள்ள பல இடங்களில் செல்பி படம் எடுப்பதற்கு தடைவிதிக்க, இந்திய காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை - பாந்ரா கோட்டைக்கு அருகில் நண்பர்கள் சிலர், செல்பி படம் எடுக்க முற்பட்ட போது, யுவதி ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மும்பை நகர, பல இடங்களில் இவ்வாறு செல்பி படம் எடுக்க தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த யுவதியை காப்பாற்ற சென்றவரின் சடலம், இது வரை மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்பி படம் எடுக்கும் அபாயகரமான 16 பகுதிகளை மும்பை பாதுகாப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் விஷேட பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments