கொழும்பு மாநகர மேயராக பதவி வகித்த இம்தியாஸ் மீண்டும் தனது பழைய தொழிலான ஆட்டோ ஓட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றார்.
2004 -2009 வரை கொழும்பு மாநகர மேயராக இம்தியாஸ் பதவிவகித்திருந்தார்.
குட்டிப் பாராளுமன்றம் என அழைக்கப்படும் கொழும்பு மாநகர சபை மேயர் இவ்வாறு ஆட்டோ டிரைவராக செயற்படுவது பலருக்கு கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேயர் பதிவியிலிருந்து விலகியதன் பின்னர் அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் முக்கிய பதவியொன்றை அல்லது தொழில் வாய்ப்பை அப்போதை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இம்தியாஸுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. கொலண்ணாவையில் வசிக்கும் இம்தியாஸ் அந்த பிரதேசத்திலேயே ஆட்டோ தொழிலையும் முன்னெடுத்து வருகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து சுயேற்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த இம்தியாஸ் தலைமையிலான குழுவினருக்கு ஐ.தே.க ஆதரவு வழங்கி மேயராகவும் அமர்த்தி அழகு பார்த்தது. பின்னர் அவர்கள் சுதந்திரக் கட்சிக்கு மாறியிருந்தார்கள்.
இதே போன்று தான் கல்முனை மாநகர சபைக்கான முகாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அஜ்மீர் தலைமையிலான குழுவை அன்று முகா ஆதரித்து வெற்றிபெறச் செய்ததது.
இதன் மூலம் கல்முனை மாநகரின் முதல் மேயர் என்ற அந்தஸ்த்தை அஜ்மீர் என்பவர் பெற்றார்.
மேயர் பதவியிலிருந்து அஜ்;மீர் விலகியதன் பின்னர் அவரை கௌரவப் படுத்தும் வகையில் அஜ்மீர் சுவிஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அஜ்மீர் இன்று சுவீஸ் நாட்டில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருவதாகவும் சுவீஸ் நாட்டுக்குச் செல்லும் அத்தனை அரசியல் வாதிகளும் அஜ்மீரை தவறாது சந்தித்து விட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றது.


0 Comments