Subscribe Us

மராவின் காலத்தில் நடந்திருந்தால் புறாவின் கதை கிழிஞ்சு போயிருக்கும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


அநுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் கடிதப் பரிமாற்றத்துக்குப் புறாக்களைப் பயன்படுத்தியமை தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பாடசாலை அதிபரும் மாணவர்களும் தாள் ஒன்றில் இரகசியமான விடயமொன்றை எழுதி புறா ஒன்றின் கால்களில் கட்டி பறக்க விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திலிருந்து நேற்றுக் காலை 8.26 க்கு பறக்கவிடப்பட்ட இந்தப் புறாக்கள் முற்பகல் 10.45 மணியளவில் வத்தளை ஹெந்தலையை சென்றடைந்துள்ளன. 

சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களிலும் அவை கடந்து வந்துள்ளன. பாடசாலை மாணவர்களும் அதிபரும் புறா ஒன்றின் காலில் கட்டி வைத்திருந்த கடிதத்தை சுமந்திருந்த புறாவும் அவற்றில் காணப்பட்டது. 

இங்கு நான் கூற வருவது என்னவென்றால், இவ்வாறானதொரு நிகழ்வு மராவின் (மஹிந்த ராஜபக்க்ஷ) ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தால் இந்தப் புறாக்கள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக உளவு பார்த்தமை மற்றும் தகவல்களை பரிமாறியமை அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிரியாவிலிருந்து இவை இங்கு அனுப்பப்பட்டு இலங்கையிலுள்ள சிலருக்கு தகவல்கள் பரிமாற்றங்களைச் செய்து, உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டமை என்றெல்லாம் இந்த அப்பாவி புறாக்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கவும் கூடுமல்லவா?

Post a Comment

0 Comments