Subscribe Us

header ads

நாம் அறியாத பல வியத்தகு தகவல்கள் !

1) ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!
2) நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!
3) படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!
4) உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.
5) அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.
6) உலகத்தின் 5வது முக்கிய இணையதளமாக விளங்கும் ‘விக்கி பீடியா’ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மொத்தம் 154 பேர் மட்டுமே!
7) நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய ‘மே’ பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றன.
8) சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்! நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.
9) எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.
10) தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.



Post a Comment

0 Comments