மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அண்மையில் மட்டு. செயலகத்தில் இடம்பெற்றது, இதன்போது பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் அருகருகே அமர்ந்து காணப்படும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
இவ்வாறான புகைப்படம் ஒன்றை நான் கண்ணுற்ற போது, அதனைப் பார்த்த எனக்கு இவர்கள் இருவரும் (அமீர் அலி- ஹிஸ்புல்லாஹ்) என்ன கதைத்தார்களோ என்ற கற்பனையில் சஞ்சரித்தேன். அதன் அறுவடையைக் கீழே தருகிறேன். (யாவும் கற்பனை)
எனது முகநூல் நண்பர்களே! இவர்கள் இருவரும் (அமீர் அலி- ஹிஸ்புல்லாஹ்) என்ன பேசியிருப்பார்கள் என்ற உங்களது கற்பனையையும் இங்கே பதிவிடுங்கள். அவை நகைச்சுவையாக மட்டும் இருக்கட்டும். எவர் மனதையும் புண்படுத்தாமல் அமையட்டும். அனைவரும் உங்களது கற்பனையைப் படித்து விழுந்து..விழுந்து சிரிக்கட்டும்.
எனது கற்பனையிலான அவர்களது
உரையாடல் இவ்வாறு அமைந்துள்ளது.
-------------------------- -------------------------- -----
ஹிஸ்புல்லாஹ்:- ஹலோ மச்சான் அமீர் அலி எப்படி சுகமா?
அமீர் அலி:- ஷ்..ஷ்.. மெதுவா பேசு.. பக்கத்தில நம்ம ஜெம்ம விரோதி.. வெரி..வெரி டேஞ்ஜர் மேன்.. ஹாபிஸ் நஸீர் இருக்கான்.. கவனமாகப் பேசு மச்சான்.
ஹிஸ்புல்லாஹ்:- ஓம் மச்சான் கவனமாகத்தான் இருக்கனும்… கேட்காத மாதிரி கேட்பான். பார்க்காத மாதிரி பார்ப்பான்.. நம்மட ஏரியாக்குள்ளேயே நம்மல நுழைய விடாம தண்ணி காட்டும் டேஞ்சர் மேன் அவன்..
ஹிஸ்புல்லாஹ்:- இந்த ஹாபிஸ் நஸீரால சரியான கஷ்டமா இருக்கு மச்சான்.. நான் அடிக்கல் நாட்டினா.. அவனும் திருப்பி அடிக்கல் நாட்டுறான்.. நான் எதையாவது திறந்து வைச்சா திருப்பி அவனும் வந்து அதேயே திறந்து வைக்கிறான்.. சரியான மண்டக் குழப்பமாக இருக்கு மச்சான் எனக்கு..
அமீர் அலி:- அடே உனக்கு மட்டுமல்லடா.. எனக்கும் இதே கேஸ்தான்.. ஏறாவூரில அவன் படுத்துற பாடு சொல்லி வேலை இல்ல மச்சான்… இவன என்ன செய்யுறதென்டே தெரியல்ல.. பார்ப்பம் கிட்டத்துல மாகாண சபைத் தேர்தல் வருதுதானே ஒரு புடி புடித்து அவனை நொக்கவுட் பண்ணுவமும்…
ஹிஸ்புல்லாஹ்:- அது சரி மச்சான் உங்கட கட்சி எப்படி போகுது..
அமீர் அலி:- பரவாயில்ல மச்சான் தலைவர் ரிஷாத் கட்சியை இழுத்துக் கொண்டு போராறு..
ஹிஸ்புல்லாஹ்:- இந்த வை.எல்.எஸ். ஹமீதுட பிரச்சினை என்ன மச்சான்…
அமீர் அலி:- அது பெரிய விஷயமில்லை மச்சான்.. மைத்திரி,திஸ்ஸ அத்தநாயக்க, ஹஸன் அலி இவங்களப் போலதான நம்மட ஹமீதுட பிரச்சினையும்.. அதெல்லாம் பெரிய இசூ இல்ல மச்சான்.
ஹிஸ்புல்லாஹ்:- அப்படின்னா அதாவுல்லா கட்சியில செயலாளர் குழப்பம் இல்லையே மச்சான்..
அமீர் அலி:- அட மடையா.. அவன் அதாவுல்லாட கட்சியில் யாருடா செயலாளர்? யாருடா தலைவர்? யாருடா பொருளாளர்? எல்லாம் அதாவுல்லாதானடா, அவனுக்கு ஒரு புரப்பளமும் இல்லடா!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 Comments