அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூததரகத்தை மூடிவிடும் தீர்மானத்தை அமைச்சரவையில் அறிவித்த போதே இது நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாகவே இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பை அமைச்சர் றிசாட் வெளிக்காட்டியதுடன்,இலங்கை முப்பது வருடங்களாக யுத்தம் நடைபெற்ற போது இங்குள்ள தூததரகங்களை மூடி சர்வதேசம் எங்களைக் கைவிடவில்லை என்று வாக்குவாதப்பட்டுள்ளார்.முன ்னதாக ஈராக் இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அமைச்சர் ஹலீம் உள்ளடங்களாக சில பெரும்பான்மையின அமைச்சர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனவே இத்தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
-Haseef Marikkar-


0 Comments