அண்மையில் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் சிங்கப்பூரில் வைத்து யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாகக் கூறிய விடயமானது பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டது.
மேலும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் சென்றதாகவும் குறிப்பிடப் -பட்டிருந்தது.
இந்த மாகாணசபை உறுப்பினர் சிங்கப்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மாகாணசபை உறுப்பினர் யாரென்ற விடயம் வெளிநாட்டு ஊடகங்ககளில் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில், கடந்த மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் சார்பில் மத்திய மாகாண சபையில் போட்டியிட்ட மானெல் பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபராவார்.
இவர் 23400 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றி பெறச்செய்ய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட நபர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments