Subscribe Us

header ads

இலங்கை சனத்தொகையில் பாதிப்பேரை வாழவைக்கும் பண்ணைத் தொழிலுக்கு சாவுமணியடிப்பது பகல் கனவாகும்!

இது ஒரு தேசியப் பிரச்சினை...

தற்பொழுது இலங்கையில் 410,000 குடும்பங்கள் நேரடியாக பால் உற்பத்தியிலும் மற்றும் கோழி, ஆடு, மிருக பண்ணை வளர்ப்பில் 1.2 மில்லியன் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் உணவு உற்பத்திக்குத் தேவையான ஒரு பகுதியை கால்நடை வளர்ப்புகள் பெருமளவில் ஈடுசெய்கின்றது. இலங்கையின் சனத்தொகை பெருக்கத்திற்கு ஒரு வருடத்திற்கு 750 மில்லியன் லீட்டர்ஸ் பாலும், 2,000 மெட்ரிக் தொன் இறைச்சியும் தேவைப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

ஏற்கனவே பாலுற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்காக சுமார் 440 கோடி ரூபாய்களை வெளிநாட்டுச் செலாவணி இழப்பை கொண்டுள்ள இலங்கையில் கால்நடைவளர்ப்பை ஊக்கு விப்பதற்கான திட்டங்களே வகுக்கப்பட்டுள்ளன.

பாலுற்பத்திக்காக நடத்தப்படும் பண்ணைகளில் பிறக்கும் காளை கன்றுகளை, மாத்திரமன்றி கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பெறுகின்ற காளை கன்றுகளையும் இதுவரைகாலமும் கிராமிய விவசாயிகள் விற்ற்பனை செய்து சீவியம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்றே சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் பால் கறந்த பின் வயதுமுதிர்ந்த பசு மாடுகளையும் இறைச்சிக்காக விற்பதும் வழமையாக உள்ளது, அவ்வாறே ஆடுகளும், எந்த ஒரு விவசாயியும், பண்ணையாளரும் இயற்கையாக மரணிக்கும் வரை கால்நடைகளை வைத்து பராமரித்தில்லை.

நீண்ட காலத்திற்கு அவற்றை பராமரிப்பதற்கான இயற்கையான புல், தாவர ,தானிய வகைகளோ அவற்றிற்கான தீவனங்களோ இந்த நாட்டில் பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடிகளினையே தோற்றுவிக்கும்.

சகல ஜீவராசிகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன. மனிதன் காய்கறிகளை உண்கிறான். சில பிராணிகளையும் சாப்பிடுகிறான். ஆடு, மாடு போன்றவை செடிகொடிகளை சாப்பிடுகின்றன. புலி, சிங்கம் போன்றவை ஆடு, மாடு, மான்களை சாப்பிடுகிறது. தாவரங்களை உண்ணும் பிராணிகள், தாவரங்களை உண்டு வாழ்கின்றன. விலங்குகளை உண்ணும் "மாமிசபட்சிணிகள்", தாவரங்களை உண்ணும் விலங்குகளை பிடித்து சாப்பிடுகின்றன. இது இயற்கையின் சமநிலை. இது இறைவன் வகுத்துள்ள இயற்கையின் சுழற்சி. யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

கால்நடைகளை அறுக்கின்றமை தடை செய்யப்பட்டால் பாதிக்கப்படுவது இலங்கையின் கிராமியப் பொருளாதாரமே! ஏற்கனவே இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் பேர்கள் கடல் கடந்து மத்திய கிழக்கு நோக்கி படை எடுக்கின்றார்கள்.

இந்த விவகாரம் முஸ்லிம்களை மாத்திரம் பாதிக்கும் ஒரு விவகாரமல்ல, சரியான பொருளாதார திட்டமிடல் ஆலோசனைகள் பெறப்படாமல் அரசியல் வாதிகள் வெளியிடும் கூற்றுக்கள் குறித்து நாம் ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்களை மேற்கொள்வது ஆரோக்கியமாக இருக்காது.

இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் மாட்டிறைச்சியில் மூன்றில் ஒரு பகுதியையேனும் முஸ்லிம்கள் நுகர்வதில்லை, மாறாக முஸ்லிம் அல்லாதவர்களும் நுகர்கின்றார்கள், சுற்றுலாத்துறையும் கொள்வனவு செய்கின்றது.

ஹலால் விவகாரத்தில் நாம் அவசரப்பட்டோம், இலங்கையில் சுமார் 3000 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி வெளிநாட்டு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்த எம்மீது காழ்ப்புணர்வுப் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

ஜனாதிபதியவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது ஒரு சுவாரசியமான நிகழ்வு இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது, அதாவது மொழிபெயர்ப்பாளர் மாமிசம்/இறைச்சி என்பதனை மாட்டிறைச்சி என்று மொழி பெயர்த்த பொழுது குறுக்கிட்ட ஜனாதிபதி அவர்கள் இல்லை இல்லை எல்லா வகையான இறைச்சியும் தான் என்று சொன்னார்களாம்.

எனவே ஆடு மாடு கோழி மீன் பன்றி என சகல விதமான மாமிசங்களையும் அழுத்தம் திருத்தமாகஉள்ளடக்கிய ஜனாதிபதி எந்த நோக்கத்தில் (அசாத்தியமான) ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதனை சற்று பொறுத்திருந்து பார்ப்போமே.

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments