ஒரு தாயாக ஷிராந்தியின் மன நிலையும் ஒரு தந்தையாக மஹிந்தவின் மன நிலையும் கவலைக்கிடமானதுதான்.
தனது பிள்ளையின் கையில் விலங்கு மாட்டியிருப்பதை பார்க்கும் துர்ப்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது.
ஆனால் மஹிந்த தனக்கு இருந்த அதிகாரத்தை மிக மோசமாக பயன்படுத்தியதின் விளைவுதான் இந்தக் கண்ணீரும் கவலைகளும்.
இலங்கை வரலாற்றில் மஹிந்த குடும்பம் கடந்த காலங்களில் அனுபவித்த வாழ்க்கையை இதுவரை யாரும் அனுபவித்திருக்கமாட்டார்கள் .
ஆனால் அவர்களது சொகுசு வாழ்க்கைக்குப் பின்னால் இலச்சக்கணக்கானவர்களின் கண்ணீர் இருந்தது.
அந்தக் கண்ணீரின் வலி என்ன என்பதை நேற்று மஹிந்தவும் ஷிரான்தியும் உணர்ந்திருப்பார்கள்.
தண்ணீர்கேட்டுப் போராடிய இளைஞனை கொன்றுவிட்டு இவர்கள் அலரி மாளிகையில் இளவரசர் சால்சுடன் கேக் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
தாஜுடீனை கொன்று கொழுத்திவிட்டு அவனது காதலியுடன் கூத்தடித்தார்கள்.
அதிகாரம், பணம், மக்கள் காட்டும் மரியாதை இது மூன்றும் ஒரே நேரத்தில் கிடைக்கும் பொழுது மனிதன் சில நேரங்களில் தன்னிலை மறந்துவிடுகிறான்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஒரு பாடசாலையின் அதிபராக இருந்தாலும் அவர் அவர் அவருக்குரிய பொருப்புக்களை சரியாகப் பயன் படுத்தாத பொழுது இறைவனின் கோபம் சாபமும் நேரடியாகவே இறங்கிவிடுகிறது.
மஹிந்த செய்த மிகப் பெரிய அதிகாரத் துஷ்ப்பிரயோகங்களும் அநியாயங்களுங்குமான அருவடயைை இப்போதுதான் அவரும் அவரது குடும்பம் அனுபவத்திக் கொண்டிரு்க்கிறது.
மஹிந்த மாதிரி ஒரு ஜாம்பாவனுக்கே இந்த நிலமை என்றால் கொஞ்சம் பணமும் அதிாரமும் வைத்துக் கொண்டு ஆடுபவர்களது ஆட்டம் முடிவதற்கும் வேசம் கழைவதற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும்.
-SAFWAN BASHEER-


0 Comments