Subscribe Us

header ads

நல்லாட்சி பற்றி பேசியவர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்! கோத்தபாய (படங்கள் இணைப்பு)

நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. உயர்மட்ட அரசியல்வாதிகளுக்காக 25 வயதான மகனை பழிவாங்குவது ஏற்புடையதல்ல.

யோசிதவை படையில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததே நான்தான்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments