ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக் (M.Sharif Thowfeek) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 19ம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக பின்னர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments