இலங்கையின் சொத்துக்களின் பெரும்பகுதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் படி தேசிய பட்ஜெட்டில் 70 சதவிகிதத்தை மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் இரண்டாவது மகனை இரண்டு வார கால நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் கடற்படை அதிகாரியாக இருந்த யோசித ராஜபக்சவிற்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சி தொடர்பாகவே அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
கடற்படை லெப்டினன்ட் பதவியில் இருந்த யோசித ராஜபக்சவுடன் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ள காவற் துறையினர் அவர்களை கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்
இவ்வாறு கைதான நான்கு பேரில் ஒருவர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் கிரிகெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க ஆவார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் ஆட்டங்களின் உரிமைகளை சி.எஸ்.என். ஊடகம் பெற்றிருந்தது.
இந்நிலையில் சி.எஸ்.என். ஊடகத்தில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில்தான் இந்த கைது நடவடிக்கைகள் நடந்துள்ளது. இவர்கள் அரசாங்க வாகனங்களையும் கருவிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும், பில்லியன் கணக்கில் வரி பணத்தை செலுத்த தவறியதாகவும் கூறப்படுகிறது.
இன்று கைது செய்யப்பட்ட்டவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனாவார். ஆனால் முன்னதாக அமெரிக்கா சென்று இருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் குறுகிய காலத்தில் வெளியில் வந்துவிட்டார்.
அவருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றதாக அண்மைய நாட்களாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரசன்னமாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் மீதும், மற்றும் அவரது மகன்கள் மீதும் இதுவரை மைத்திரி ரணில் அரசு சரியான விதத்தில் விசாரணைகளை நடத்தாமல் இருந்துள்ளதாகவும், மைத்திரி அரசின் அசமந்தப் போக்கே இதற்க காரணம் என பல்வேறு அரசியல் அவதானிகளும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகிந்தவின் இரண்டாவது புதல்வர் நேற்று கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தன்னுடய மகன் நாமல் ராஜபக்சவுடன் நீதிமன்றத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச தன்னுடைய குடும்பத்தினரை பழிவாங்கும் செயலில் மைத்திரி அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு தனது மகனை பார்த்து மகிந்த ராஜபக்ச மனமுடைந்து கண்களில் கண்ணீர் நிறைந்து காணப்பட்டார் என்று பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்னதாக இலங்கையின் ஆட்சியில் மகிந்த ராஜபக்ச அதிகாரமுடையவராக இருந்த போது தேசிய பட்ஜெட்டில் 70 சதவிகிதத்தை ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என கடந்தாண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
ஆனால் இதுவரை முறையான விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை. தற்பொழுது நடைபெறும் கைதுகளும் விசாரணைகளும் வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் சார் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
0 Comments