இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ''சிங்க லே'' அமைப்பினர் ஏந்தி செல்லும் தேசிய கொடியே இது..
ஒரு நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் பறைசாற்றும் சின்னமே அந்த நாட்டின் தேசியக்கொடி, ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும் மரியாதைக்கு எந்த வகையிலும் குறையாத மரியாதை அந்த நாட்டின் தேசியக்கொடிக்கும் வழங்ககப்பட வேண்டும்.
தேசிய கொடியை கையாள்வதில் பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன, அவற்றிக்கு உட்பட்டே நாட்டின் தேசிய கொடி கையாளப்பட வேண்டும்..
* ஒரு தேசியத் தலைவரின் மரணம் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்படும் மனித அழிவின் போது தேசத்தின் சோகத்தை காண்பிக்கும் முகமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.
* தேசியக் கொடியை பறக்கவிடும் போது அதன் நிறம் மங்கியிருந்தாலோ அதன் சில பகுதிகள் கிழிந்திருந்தாலோ அவற்றை பறக்கவிடுவது நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு செய்யும் ஒரு அவமதிப்பாக கருதப்படுகிறது. எனவே, தேசியக் கொடியை நாட்டு மக்கள் அனைவரும் மரியாதையுடனும் பக்தியுடனும் பயன்படுத்த வேண்டும்.
* முக்கிய நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை பயன்படுத்திய பின்னர் அவற்றை மிகவும் பாதுகாப்பாக இறக்கி நெறியாக மடித்து வைக்க வேண்டும். அடுத்த தேசிய நிகழ்வுகள் நடைபெறும் தினத்தில் மாத்திரம் கம்பங்களில் பறக்க விட வேண்டும்.
* தேசிய கொடியை தலைகீழாக கவனக்குறைவின் நிமித்தம் கட்டுவது மன்னிக்க முடியாத குற்றம் இலங்கை சட்டப்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
* தேசியக் கொடியை பறக்கவிடும் போது அதன் ஒரு பகுதி தரையில் படுவதையோ வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது விழுவதையோ தடுக்க வேண்டும். இவ்விதம் தேசியக் கொடியை கட்டுவதும் ஒரு தண்டனைக்குரிய குற்றம்..
* தேசியக் கொடியை பாதைகளின் குறுக்கே கட்டுவதும் அதனை அவமதிக்கும் செயலாக கருதப்படும் அதேவளை தண்டணைக்குரிய குற்றமாகவும் இருக்கின்றது.
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேசியக் கொடிகளை அச்சிடும் அச்சகங்கள் அதன் இயற்கையான வர்ணங்களை மாற்றிவிடாமலும் அவதானமாக இருக்க வேண்டும் தேசிய கொடியின் இயற்கையான வர்ணங்களை மாற்றுவதும் பெருங்குற்றமாகும்.
ஒரு தேசிய கொடியின் கையாள்கையில் இவ்வளவு விதிமுறைகள் இருக்கின்ற சமயம் அந்த விதிமுறைகளை மீறும் விதமாக சிறுபான்மையினரை பிரதிநித்துவம் செய்யும் நிறங்களை தேசிய கொடியில் இருந்து அகற்றி அதை பகிரங்கமாக வீதியில் எடுத்து செல்ல ''சிங்க லே'' அமைப்பினரை அனுமதித்திருக்கிறது நல்லாட்சி..
1972ம் ஆண்டில் இலங்கை ஒரு ஜனநாயக குடியரசாக மாற்றமடைந்த போதும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்ட போதும் கூட எமது நாட்டின் தேசியக் கொடியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இப்போது ஒரு அமைப்பு இலங்கையின் தேசிய கொடியை மாற்ற அனுமதித்திருப்பது வெட்ககேடானதும் நாட்டின் இறைமையையும் கௌரவத்தையும் இழிவுக்குட்படுத்தும் ஒரு செயலுமாகும்..
தேசிய கொடியை அவமதித்தது தொடர்பில் ''சிங்க லே'' அமைப்பினருக்கு எதிராக நல்லாட்சி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு நல்லாட்சி என்கின்ற தனது பெயரை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும்.
-Razana Manaf-


0 Comments