Subscribe Us

header ads

இரண்டரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

அடையாளப் படம்

இரண்டரை வயதினையுடைய பெண் குழந்தையை கொடூரமான முறையில் தாக்கியவரை கைது செய்துள்ளதாக வனாத்தவில்லு காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 22 வயதினையுடைய  எழுவங்குளத்தினை சேர்ந்தவர் ஆவார். 

சந்தேகத்திற்குரிய கணவர் கரும்பினால் குழந்தைக்கு கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குழந்தையின் உடலில் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது குழந்தை புத்தளம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர், புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லு காவற்துறையினர்  ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments