இலங்கையை கைப்பற்றி தாய் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தினத்தை எமது ஊரில் நினைவுபடுத்தி கொண்டாடும் வகையில் இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் புத்தளம் கிளையும் "சுரகிமு ஸ்ரீலங்கா " என்ற அமைப்பும் சேர்ந்து இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்து உள்ளது.
மேற்படி, இந்நிகழ்வுக்கு சமூகத்தில் இருந்து இன,மத வேறுபாடுகள் இன்றி பங்களிப்பு செய்யக்கூடிய,சமூக ஆர்வம் மற்றும் நாட்டுப்பற்று உள்ள தொண்டர்களை (Volunteers) இந்த அமைப்புகள் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பார்க்கிறன.
இந்நிகழ்வுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஊழியர்கள் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்பு கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Tel- 075 703 5882, 0757036170
குறிப்பு:- கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கான சில ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யவேண்டி உள்ளதால் உங்கள் பெயர்களை உரிய திகதிக்கு முன்பு பதிவு செய்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
-Amhar Hussain-
0 Comments