Subscribe Us

இலங்கை நிருவாக உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம். (PHOTOS)

வரவு - செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாகன வரிச் சலுகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் இலங்கை நிருவாக சேவை சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது.

சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட இலங்கை நிருவாக சேவை கிளையினால் நேற்று (03) மதியம் பகல் போசன இடைவெளியில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை சுமார் 1 மணித்தியாலயம் வரை இடம்பெற்றது.

நேற்று மதியம் 12 மணி தொடர்க்கம் 1.00 மணிவரை முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஸ்கரிப்பு திருகோணமலை மாவட்ட அரசாங்க செயலாளர் காரியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை இல்லாமல் செய்தமைக்கு எதிராகவும், 10 ஆயிரம் ரூபாவை சம்பளத்துடன் சேர்த்து தரும்படியும் கோரியே இப்பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா -






Post a Comment

0 Comments